ம க்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பி.) பிளவு எதுவும் கிடையாது என அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க இன்று திங்கட்கிழமை டெய்லி மிரரிடம் கூறினார்.
ஜே.வி.பிக்குள் பிளவு நிலவுவதாக வெளியான செய்திகள் குறித்து சோமவன்ஸ அமரசிங்கவிடம் கேட்டபோது, 'எமது கட்சிக்குள் பிளவு எதுவுமில்லை என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியும்' என்றார்.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துவதை தமது கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். ' மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்த சட்டத்தையும் நாம் எதிர்க்கிறோம். மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் எந்த சட்டமும் நீக்கப்பட வேண்டும்' என அவர் கூறினார்.
1978 ஆம் ஆண்டு இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தனது கட்சி அதை எதிர்த்ததாக அவர் தெரிவித்தார்.
'அச்சட்டத்தினால் மக்களுக்கு உள்ள ஆபத்தை நாம் முன்கூட்டியே ஊகித்தோம். லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி உட்பட இந்நாட்டின் இடதுசாரி கட்சிகளை இச்சட்டத்திற்கு எதிராக நாம் செயற்பட வைத்தோம். இப்போராட்டத்தற்கு நாம் தலைமை தாங்கினோம். அதை நாம் தொடர்வோம்' என அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’