கோ ண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில் உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் பதுங்கியிருந்த இரு இனந்தெரியாத நபர்களில் ஒருவரை ஊரார் மடக்கிப் பிடித்துள்ளனர். இனந்தெரியாத நபர்கள் இருவர் வீட்டுக்குள் பதுங்கியிருப்பதை வீட்டுக்காரர்கள் கண்டதைத் தொடர்ந்து அவர்கள் தப்பி ஓட முற்பட்டவேளையில் அந்தப் பகுதி இளைஞர்களினால் ஓருவர் மடக்கிப் பிடிக்கப்பட மற்றவர் தப்பி ஓடியுள்ளார்.
இன்று புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட நபரைக்கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதியில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இச்சம்பவத்தினையடுத்து கோண்டாவில் பகுதியில் பெரும் பதற்றமான நிலை காணப்பட்டது. அந்தப் பகுதி இளைஞர்கள் மிகவும் தந்திரமாக சந்தேகநபரை வாசிகசாலையின் அறையில் வைத்து பூட்டிவிட்டு காவல் இருந்தார்கள்.
இந்நிலையில் குறிப்பிட்ட சந்தேகநபரை புகைப்படமெடுக்க முற்பட்டவேளையில் பாதுகாப்பு தரப்பினரால் தடுக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. பலத்த இராணுவ காவலின் மத்தியில் சந்தேக நபரினை வெளியில் கொண்டுவந்த இராணுவத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’