வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, அவரது தோழிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களுர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களுர் தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில், வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பது நியதி என்று கூறியுள்ளனர்.
இதனால், அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும், அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது. அவர் பெங்களுர் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதை இன்றைய தினத்திற்குள் தெரிவிக்க வேண்டும்என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெங்களுர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதால் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பெங்களுர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஜெயலலிதா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’