வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 ஆகஸ்ட், 2011

நேட்டோ தாக்குதலில் கடாபியின் மகன் பலி?

லிபியாவில் நேட்டோ படைகளின் வான் தாக்குதலில், லிபிய அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான காமிஸ் கடாபி பலியானதாக லிபிய கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
ஸிலிட்டான் நகரில் இடம்பெற்ற இத்தாக்குதலில் காமிஸ் கடாபி உட்பட 32 பேர் பலியானதாக அப்பேச்சாளர் கூறியுள்ளார். எனினும், காமிஸ் கடாபி கொல்லப்பட்டதாக நேட்டோ அமைப்போ அல்லது லிபிய அரசாங்கமோ உறுதிப்படுத்தவில்லை.
எனினும் ஸிலிட்டான் பகுதியில் வியாழனன்று லிபிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு இலக்கொன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
தலைநகர் திரிபோலியிலிருந்து சுமார் 160 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஸிலிட்டான் நகர், காமிஸ் கடாபியின் 32 ஆவது படையணி நிலைக்கொண்டுள்ள முன்னரங்கப் பகுதியாகும்.
28 வயதான காமிஸ் கடாபி, கேணல் முவம்மர்கடாபியின் 7 ஆவது மகன் ஆவார். இவர், கடந்த மார்ச் மாதம் லிபிய விமானமொன்றில் பயணம் செய்தபோது அவ்விமானத்தின் விமான தற்கொலைபாணியில் விமானத்தை மோதி சிதறச் செய்ததன் மூலம் காமிஸ் கடாபி பலியானதாக கடாபிக்கு எதிரான 'அல் மனாரா' எனும் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் அவர் உயிரோடு இருக்கும் படங்களை லிபிய அரசாங்கம் பின்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’