வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

லண்டனில் பாரிய வன்முறைகள்

ண்டனின் வடபகுதியான டொடென்ஹாமில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நேற்றிரவு அப்பகுதியில் பாரிய வன்முறை மூண்டது.

பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் டொடென்ஹாம் நகர வீதிகளில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனங்கள் மீது பெற்றோல்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
காயமடைந்த 8 பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் இயல்புநிலையை ஏற்படுத்தும் முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த வியாழனன்று மோதலொன்றின்போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 29 வயதான மார்க் டக்கன் எனும் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இவ்வன்முறைகள் வெடித்தன.
பொலிஸாரின் இரு ரோந்துக் கார்கள் இரட்டைத் தட்டு பஸ் உட்பட பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
டொடென்ஹாம் பிராந்தியம் இங்கிலாந்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகவுள்ளது. இது லண்டனில் அதிக கறுப்பின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகும். அங்குள்ள சிறார்களில் அரைப்பங்கினர் வறுமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’