வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 ஆகஸ்ட், 2011

பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பிரகாரம் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நீக்க தயார்: ஜயரட்ண


யங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பிரகாரம் அவசரகாலச் சட்டம் ஒழுங்கு விதிகள் கட்டளைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நீக்குவதற்காக யோசனைகள் பாராளுமன்றத்தில் மிக விரைவில் சமர்பிக்கப்படும் என்பதனை மிக சந்தோசத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் என்றும் இவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையி; 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கட்டளைகள் மற்றும் அதிகாரங்களில் பெரும்பாலானவை 2010 மே மாதம் 2 ஆம் திகதி குறிப்பிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக நீக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான நடவடிக்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு புலி பயங்கரவாத செயற்பாடுகள் இந்த நாட்டிற்குள் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் மக்களின் நலன்புரி விடயங்களின் மேம்பாட்டிற்காக அவசரகாலச்சட்டம் ஒழுங்க விதிகள் நீக்கப்பட்டன. அதன் பின்னர் இன்று வரையிலும் 2005 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்ட சிற்சில கட்டளைகள் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பிற்காக சில காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டது. அதேபோல இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கான பாதுகாப்பு முக்கிய இடங்கள் என்று இனங்காணப்பட்டுள்ள கொழும்பு உள்ளிட்ட கேந்திர இடங்களில் நிறுவப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பாதுகாப்பிற்காக அவசரகாலச் சட்டத்தின் சிற்சில ஒழுங்கு விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த ஒழுங்கு விதிகளும் கட்டளைகளும் அமுல்படுத்தப்படுகின்றன. எனினும் தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு படையின் ஆலோசனையின் பிரகாரம் அவசரகாலச்சட்ட ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான யோசனை மிக விரைவில் பாராளுமன்றத்தில் ஆற்றுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதனை விருப்பத்துடன் தெரிவித்து கொள்கின்றேன். புலி அமைப்பு இலங்கைக்குள் செயற்பாட்டில் இல்லாத போதிலும் புலி அமைப்பை மீண்டும் உயிரூட்டுவதற்கு வெளிநாட்டு சக்திகள் தற்போது செயற்படுகின்றன. இலங்கை அரசாங்கத்தை இடைஞ்சலுக்கு உட்படுத்துவதற்கு வெளிநாட்டு புலிகள் முயற்சிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னுரிமையுடன் செயற்படுகின்றன. அதேபோல தென்னிந்தியாவிற்குள் இருக்கின்ற புலி அமைப்பிற்காக குரல் கொடுக்கின்ற குழுவினர் மக்களை ஐக்கியப்படுத்தி இலங்கைக்கு எதிராக பல்வேறான பொருளாதார தடையை விதிப்பதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது என்றாலும் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. சிவில் மக்களிடையே ஒளிந்து இருக்கின்ற பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகின்றனர். அவற்றை முன்னெடுப்பதற்காக அவசரகாலச் சட்ட கட்டளைகளை அரசாங்கத்திற்கு அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தேவையான சந்தர்ப்பங்களில் சிற்சில ஒழங்கு விதிகள், கட்டளைகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’