வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 ஆகஸ்ட், 2011

அப்ஸல் குருவுக்கான தண்டனையை குறைக்க காஷ்மீர் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால்?: காஷ்மீர் முதல்வர்

ராஜீவ் கொலை வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்க வேண்டுமென தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியதைப் போல், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய அப்ஸல் குருவின் மரண தண்டனையை குறைக்க வேண்டுமென ஜம்மு காஷ்மீர் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கான (மற்றவர்களின்) பிரதிபலிப்பு 'ஊமையானதாக' இருக்குமா என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான  மரண தண்டனையை குறைக்க வேண்டுமென தமிழக சட்டசபை நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. செப்டெம்பர் 9 ஆம் திகதி இத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி, பலரை கொன்ற குற்றத்திற்காக அப்ஸல் குரு எனும் மொஹமட் அப்ஸலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையுடன் ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டோருக்கான மரண தண்டனையை ஒப்பிட்டு ட்விட்டர் செய்தியொன்றை விடுத்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா.

'தமிழ் நாடு நிறைவேற்றிய தீர்மானம்  போல் அப்ஸல் குரு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் தீர்மானமொன்றை நிறைவேற்றினால் அதன் பிரதிபலிப்பு 'ஊமையானதாக' இருக்குமா? அப்படியிருக்கும் என எண்ணவில்லை' என ட்விட்டர் செய்தியில் பாருக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் அப்ஸல் குருவுக்கு மரண தண்டனைவிதித்து தீர்ப்பளித்தது. 2006 ஆம் ஆண்டு இம்மரண தண்டனை நிறைவேற்றப்பட விருந்தபோதிலும் அத்தண்டனை இன்னும் அமுல்படுத்தப்படாமல் உள்ளது.

ஓமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஜம்மு காஷ்மீர் மாநில ஆட்சியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒமர் அப்துல்லாவின் கூற்று தொடர்பாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அது ஒமர் அப்துல்லாவின் தனிப்பட்ட கருத்து என அக்கட்சி பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை ஒமர் அப்துல்லாவின் கருத்து துரதிஷ்டவசமானது எனவும் அவர் நிலைமையை மேலும் தூண்டிவிடுகிறார் எனவும் பிஜேபி தலைவர்களில் ஒருவரான பால்பீர் பூஞ்ச் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’