வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஊடகவியலாளர் தாக்கப்பட்டால் இளநீருடன் வைத்தியசாலைக்கு வருவேன்:கெஹெலிய

டகவியலாளர்கள் எவரேனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இளநீர் வாங்கிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு வருவேன். காரணம் நான் உங்களின் (ஊடகவியலாளர்களின்) அமைச்சர் என ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.

உதயன பத்தரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகின்ற நிலையிலும் பொலிஸார் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் என்றவகையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேற்படி கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர், 'மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு சட்டரீதியான பிரச்சினை. அதனால் அதில் தலையிட என்னால் முடியாது.
இருப்பினும் குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததை அடுத்து நேற்றைய தினம் உரிய அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பின்னர் தெரிவிக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’