வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 ஆகஸ்ட், 2011

தென் சூடான் உட்பட பல நாடுகளின் ஐ.நா. சமாதான படை நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர்

புதிதாக உருவானான நாடான தென் சூடான் உட்பட பல்வேறு நாடுகளில் ஐ.நா. சமாதானப் படையின் நடவடிக்கைகளில் இலங்கைப் படைவீரர்கள் பங்குபற்றியதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையைச் சேர்ந்த 12,210 இராணுவ வீரர்கள், 600 கடற்படை வீரர்கள், 610 விமானப்படை வீரர்கள், 574 பொலிஸார் ஐ.நா. சமாதானப் படை நடவடிக்கைகளில் பங்குபற்றியதாகவும் அரசாங்கத் தரப்பு பிரதம கொறாடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.
ஐ.நா. சமாதான படைபயில் பணியாற்றும் படை வீரர்களுக்கு 1028 அமெரிக்க டொலர் சம்பளம் பெற்றதாகவும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நாளாந்தம் 20-150 டொலர் கொடுப்பனவைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். ஹெய்டி, லெபனான், சாட், மேற்கு சஹாரா, சூடான், எத்தியோப்பியா புரூண்டி ஆகிய நாடுகளில் இராணுவத்தினர் பணியாற்றினர். சூடான்,ஹெய்ட்டி ஆகியநாடுகளுக்கு கடற்படையினர் அனுப்பப்பட்டனர், விமானப்படையினர் ஹெய்ட்டிக்கு அனுப்பப்பட்டனர். பொலிஸார் கிழக்கு திமோர், ஐவரி கோஸ்ட், சியாரா லியோன், லைபீரியா, தென்சூடான் ஆகியோருக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இத்தகவல்களை வெளியிட்டார். ஐ.நா சமாதானப் படைகளில் இலங்கை படைகள் மிக ஒழுக்கமானவர்கள் படைகளில் ஒன்றாகும் என ஐ.நா. ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’