இந்தியாவின் உத்ரபிரதேச மாநிலத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதியாகவுள்ள தனது கணவரை பார்க்கச் சென்ற பெண்ணொருவரை சிறைக்காவலர்கள் பலர் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதேகிராஹ் நகரின் மத்திய சிறைச்சாலை வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சிறையிலுள்ள தனது கணவரை பார்ப்பதற்காக மேற்படி சிறைக்குச் சென்ற பெண் வீடு திரும்புவதற்கு தாமதமான நிலையில் அன்றிரவு சிறைச்சாலை வளாகத்திலேயே தங்குவதற்கு அப்பெண் தீர்மானித்துள்ளார். இச்சிறைச்சாலையில் இது வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். அன்றிரவு 9.30 மணியளவில் அப்பெண்ணின் கணவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி அப்பெண்ணை சிறைச்சாலை ஒருவர் ஆட்களற்ற சிறைக்காவலர் விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மேற்படி சிறைச்காலவருடன் மேலும் நான்கு சிறைக்காவலர்கள் இணைந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். அப்பெண் மறுநாள் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற இச்சம்பவம் தமக்கு புகார் கிடைத்துள்ளாக பதேகிராஹ் நகர பொலிஸ் அத்தியட்சகர் சேகர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். சிறை வளாகத்திற்குள் பிரதான சிறை அத்தியட்சகர் யத்வேந்திரா சுக்லாவின் அலுவலகத்திலிருந்து 150 மீற்றர் தொலைவில் மேற்படி குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். உத்ரபிரதேச மாநில சிறைச்சாலைகள் திணைக்களமும் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’