வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

மன்னாரில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு

ன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 12 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

15 வயதிற்குபட்ட 11 சிறுமிகளும் ஒரு சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறிய அவர், இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் அவர்களது உறவினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று தங்களுக்கு தெரியவந்துள்ளதாகவும் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.
இருப்பினும் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் பாலியல் வன்முறை சாராத உடலியல் ரீதியான சித்திரைவதைகள் குறைவடைந்து காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில்; மன்னார் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோறும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’