நாட்டின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களிலும் விசேட அதிரடிப்படை முகாம்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் கட்டுப்படுத்துவதற்கு சிரமமான சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் இதற்கான உத்தரவும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தளபதியான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.டபிள்யூ.எம்.சி. ரணவன தெரிவித்தார். "அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுவதற்கு முகாம்களை அமைப்பது முதற்படியாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் சுமார் 5 முகாம்களை கொண்டிருக்கிறோம். சட்டவிரோதமாக மரம்தரித்தில், மணல் அகழ்வு, மாடுகளை கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நாம் முறியடித்துள்ளோம்' என அவர் கூறினார். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான முற்றுகைகள், கைதுசெய்தல் ஆகியவற்றுக்காக நாம் பொலிஸாருககு உதவுகிறோம். மொத்தமாக 8,000 பேர்கொண்ட படைப்பலத்துடன் பாரிய புலனாய்வு வலையமைப்பும் உள்ள|து" என பிரதிப்பொலிஸ்மாஅதிபர் ரணவன தெரிவித்தார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுவின் தலைவர் நெலுவே பிரியந்தவை கைது செய்ததுடன், அண்மையில் காவத்தைக்குச் சென்று பெண்களை கொலை செய்து,பொதுமக்களை அச்சத்தில் ஆழ்;திய சந்தேக நபரகள் அனைவரையும் கைது செய்வதற்கு பொலிஸாருக்கு உதவினோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’