கொழும்பு வடக்கிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் அக்காட்சியை செல்லிடத் தொலைபேசியில் படம்பிடித்து வெளியிட்டதாக கூறப்படும் அப்பாடசாலையின் இளம் நீச்சல் பயிற்றுநர் ஒருவரை பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நீச்சல் பயிற்றுநர் குறித்த மாணவியுடன் நட்பாகிக்கொண்டு, வார இறுதிநாட்களில் நீச்சல் பயிற்சிக்காக வரும் மாணவியை ஆட்களற்ற கட்டிடமொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக விசாரணையின் மூலம் தெரியவந்;துள்ளது. மேற்படி பயிற்றுநர், பல தடவை சம்பள உயர்வு கோரியதாகவும் ஆனால் முகாமைத்துவ கொள்கைக்கிணங்க அதற்கு பாடசாலை முகாமைத்துவம் மறுப்பு தெரிவித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முகாமைத்துவத்தை மிரட்டுவதற்காக அவர் மேற்படி மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோவில் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தேக நபர் தற்போது தனது பணியை கைவிட்டுள்ளதுடன் அவர் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டிலிருந்தும் வெளியேறியுள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சந்தேக நபரின் புகைப்படம் விசாரணையாளர்களிடம் உள்ளது. அவரை கைதுசெய்ய உதவுமாறு கோரி அப்புகைப்படத்தை வெளியிடுவார்கள் அதிகாரிகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, குறித்த மாணவி ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’