வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அஜந்த மெண்டிஸ் புதிய சாதனை; இலங்கை மீண்டும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது



வுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ருவென்ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பள்ளேகல அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜயவர்தன 63 பந்துகளில் 86 ஓட்டங்களைக் குவித்தார். குமார் சங்கக்கார 16 பந்துகளில் 24 ஓட்டங்களைப்; பெற்றார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஜோன் ஹாஸ்டிங்ஸ் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அஜந்த மெண்டிஸின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறியது. அவ்வணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அஜந்த மெண்டிஸ் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ருவென்ரி 20 போட்டிகளில் இது புதிய சாதனையாகும். 2009 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமேயே 20 ஓவர் போட்டிகளில் இதுவரை சாதனையாக இருந்தது. 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 2-0 விகிதத்தில் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’