முப்பது வருடகால யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் இலங்கைக்கு பெரும் சவாலானது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம நேற்று கூறினார்.
மில்லியன் கணக்கான மக்கள், பில்லியன் கணக்கான வளங்கள், பெரிய அரசுகள், பாரிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் ஆகியனவற்றை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இது மிக கடினமானது என அவர் கூறினார்.
இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது பெரும் சவால் எனக்கூறிய வெளிவிவகார செயலர் அமுனுகம, யுத்தக் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் புகழை நிலைநிறுத்துவதற்காக இணையம், அச்சு வெளியீடுகள், கலைகள் மற்றும் ஏனைய சாதனங்களைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு தகவல்களை பரப்புமாறு மக்களை கோருவதாகவும் கூறினார்.
ஜே.எவ். ரஞ்சித் பெரேரா எழுதிய 'வெல்லப்பட முடியாத யுத்தத்தை வெல்லுதல்' எனும் பொருளில் தலைப்பிடப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையின் யுத்தகாலம் குறித்த ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளை வைத்திருப்பதற்கு மின்னஞ்சல், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள், யூரியூப், புத்தங்கள் மற்றும் ஏனைய பிரசுரங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’