வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஜனாதிபதிக்கு பெண்களின் மார்பிலிருந்து இரத்தம் தேவையாயின் 20 லட்சம் பெண்கள் அதை கொடுத்திருப்பார்கள் :பௌஸி


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டுமாயின் இரண்டாயிரம் பெண்களின் மார்பிலிருந்து இரத்தத்தை எடுத்து அதன் மூலம் மாந்திரீகம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காகவே கிறீஸ் மனிதர்கள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுவரும் கதைகள் பொய் வதந்திகளே.
அவ்வாறானதொரு தேவை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் 20 இலட்சம் பெண்களே நேரடியாக வந்து வரிசையில் நின்று தங்களது மார்பிலிருந்து இரத்தத்தை எடுத்துக் கொடுத்திருப்பார்கள்' என்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி கூறினார். உண்மையில், மர்ம மனிதர்களின் நடமாட்டத்துக்கும் ஜனாதிபதிக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் கதைகள் அனைத்தும் வதந்திகளாகும். ஜனாதிபதி மீதும்; அரசாங்கம் மீதும் விரோமுள்ளவர்களே இவ்வாறான கதைகளை உருவாக்கியுள்ளனர். இது ஜனாதிபதிக்கு எதிரான சூழ்ச்சியாகும். இதை மக்கள் நம்பக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். பொத்துவில் பிரதேசத்தில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கத்தில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர் - பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாடும் போதே அமைச்சர் பௌஸி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றி அமைச்சர், 'கடந்த 30 வருடங்களாகக் கஸ்டப்பட்டு விட்டோம். இப்போது நிம்மதியான சூழ்நிலை உருவாகியுள்ளது. நாம் நிம்மதியாக வாழ வேண்டும். இப்போது உருவாகியுள்ள நிம்மதியான சூழ்நிலையை அனுபவிக்காமல் நாம் பிரச்சினைகளில் சிக்கிவிடக்கூடாது. இராணுவ அதிகாரியொருவரிடம் நான் தொலைபேசியில் உரையாடும் போது, கல்லடிபட்டுத்தான் சகோதர் மஹ்ஜுனுக்கு மரணம் ஏற்பட்டதாக என்னிடம் கூறினார். இது நம்பும்படியான கதையில்லை. மஹ்ஜுனின் மரணம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீத் - சாட்சியாக உள்ளார். அவரின் சாட்சியத்தை பொலிஸாரிடமும் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து கவலைப்பட வேண்டாம். மஹ்ஜுனின் மரணத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார். அதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக – உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சூழ்ச்சியில் மக்களும் பயன்படுத்துகின்றார்கள். எனவே, இந்த சூழ்ச்சியில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள். பொதுமக்களாகிய உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எம்மிடம் பேசுங்கள். எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்து தருவோம்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’