வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 ஜூலை, 2011

தமிழ் மக்களின் நலன் கருதி அல்லாது அழிவு கருதியே கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

டந்த காலத்தில் எமது மண்ணில் ஏற்பட்ட அழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அதனைத் தடுக்க வேண்டும் என்ற நேர்மையான தேவை இருக்கவில்லை. அவர்கள் அழிவுக்குத் துணை போனார்கள். ஏனென்றால் அதனை வைத்துக் கொண்டு தங்களது சுயலாப அரசியலை முன்னெடுப்பது மட்டும்தான் அவர்களது முக்கிய தேவையாக இருந்ததேயன்றி மக்களது அழிவுகள் குறித்து அவர்கள் எப்போதுமே அக்கறை காட்டவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (5) மாலை நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் கூட்டமைப்பிடம் 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இருந்தன. இந்த பலத்தை வைத்துக் கொண்டு அவர்களால் அரசுடன் தமிழ் மக்களது நலன் குறித்து பேரங்களைப் பேசியிருக்க முடியும். அதற்கான சந்தர்ப்பங்கள் கனிந்திருந்தன. என்றாலும் இத்தகைய தமிழ் மக்களின் நலன்சார்ந்த மனிதாபிமான பணிகளுக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்து விட்டனர்.

நான் கூட அவர்களுடன் தனிப்பட்ட முறையில் இது குறித்து கதைத்துள்ளேன். இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை தொடர்பிலும் கதைத்துள்ளேன். வாருங்கள், அரசாங்கத்துடன் பேசுங்கள் உங்களிடமுள்ள அரசியல் பலத்தை வைத்து தமிழ் மக்களை அழிவுகளிலிருந்தும் தடுப்பதற்கு முன்வாருங்கள். யுத்தத்தை நிறுத்துவதற்கு முன்வாருங்கள் என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் அவர்களுடன் கதைத்துள்ளேன். ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, மக்கள் அழிவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் முகங்கொடுத்து நின்றிருந்தபோது கொழும்பிலும் வெளிநாடுகளிலும் உல்லாசமாக வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் அடுத்த தேர்தலுக்கு வந்து மக்கள் அழிந்து விட்டார்கள் என நீலீக் கண்ணீர் வடித்தார்கள். இதையே தான் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

இதனை எமது மக்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். தங்களுக்கு அழிவை மட்டுமே தந்துவிட்டு வேறு எதையுமே பெற்றுத் தராதிருக்கும் கூட்டமைப்பினர் தொடர்பில் எமது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

எமது மக்களுக்குத் தேவையான ஒளிமயமானதோர் எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நோக்கம். நாங்கள் ஒருபோதும் எமது மக்களை விட்டு ஓடிப் போனது கிடையாது. அப்போதும் இப்போதும் எப்போதும் நாம் எமது மக்களுடன் எமது மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தவாறு வாழ்ந்து வருகின்றோம்.

சாத்வீகப் போராட்டம் சாத்தியமில்லாவிடில், மாற்று நடவடிக்கை பற்றி யோசிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். இதுவரையில் இவர்கள் எடுத்துள்ள மாற்று நடவடிக்கைகளால் எமது மக்கள் உயிரிழப்புகளுக்கும் சொத்திழப்புகளுக்கும் ஆளாகினார்களே தவிர எதையேனும் பெற்றுள்ளனரா? என்றும் அமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்பினார்.

இக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் புலவர் அரியநாயகம் உள்ளிட்ட பலரும் உரை நிகழ்த்தினர்.


















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’