வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 ஜூலை, 2011

தேர்தல் கடமைகளில் இராணுவத்தை ஈடுபடுத்தி த.தே.கூ பிரசாரங்கள் குழப்பப்படுகின்றன: சுரேஷ்

டக்கில் உள்ளூராட்சி தேர்தல் கடமைகளில் இராணுவத்தை ஈடுபட்டுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கம் குழப்பி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகளில் இராணுவம் ஈடுபட்டுவதால் வடக்கில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த முடியாத சூழல் தற்போது உருவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது அடாவடித்தனத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இராணுவத்தினரின் இச்செயற்பாடுகள் தொடர்பாக எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தினரின் ஜனநாயக விரோத போக்குகள் தொடர்ந்தால் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை இணைத்து ஜனநாயக வழியிலான போராட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுக்கவுள்ளனர்.
அரச இயந்திரமானது முழுப் பலத்தையும் பிரயோகித்து இந்த உள்ளுராட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக இராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளது. ஜனநாயக ரீதியில் நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் வெற்றியை வன்முறை மூலம் முறியடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’