வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஜூலை, 2011

இலங்கை மீது தலையிட நியாயாதிக்கம் இல்லை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) என்பது இறுதியாக நாடவேண்டிய ஒரு நீதிமன்றம் என ஐ.சி.சி.யின் தலைவரான சான்ங் - ஹுயுன் சோவ் கூறியுள்ளார்.
இதன் நியாயாதிக்கம் யுத்தக்குற்றம் மற்றும் இதுபோன்ற சிறு எண்ணிக்கையான கொடூர செயல் என்பவை தண்டிக்கப்படாது போவது பற்றியது ஆகும். இதிலும் இதன் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதே.
ரோம் உடன்படிக்கையின் கையொப்பமிட்ட நாடுகள் தொடர்பான விடயங்களை மட்டும் தான் இந்த நீதிமன்றத்தால் கையாள முடியும். இந்த நாடுகளில் கூட ஐ.சி.சி. எல்லை கடந்து, இறைமையை மீறி அந்தந்த நாடுகளின் வழமையான நீதிமுறைக்கு மேலாக தலையிடமாட்டாது என சோவ் கூறினார்.
இருப்பினும் நீதிமுறைமை செயலிழந்து போனதால் இறைமையுள்ள நாடுகளின் சட்டமுறைமைகள் தொழிற்படமுடியாது இருந்தால் ஏதோவொரு காரணத்தால் தேசிய சட்டமுறைமை இந்த கடமையை செய்ய விரும்பாது போனால் ஐ.சி.சி. அந்தக் கடமையை செய்யும்.
உள்நாட்டு மட்டத்தில் நிற்கவேண்டிய வழக்குகள் ஐ.சி.சி.க்கு கொண்டுவரப்படுவது பிரச்சினையாகவுள்ளது என பிரித்தானிய இராஜதந்திரியான அக்பர்கான் கூறினார்.
அரசாங்கமல்லாத சர்வதேச பயங்கரவாத செயல்களை கையாள ஐ.சி.சி. இனால் இயலாமல் இருப்பது பிரதானமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்ததாக இலங்கையில் சிவில் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களை கவனிக்க முடியாலிருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு விடயங்களும் ஐ.சி.சி.யின் மட்டுப்பட்ட நியாயாதிக்கத்துக்கு அப்பாலானவை.
ஐ.சி.சி. நான்கு துறைகளில் தான் செயற்படும். இனப்படுகொலை, யுத்தக்குற்றங்கள், ஆக்கிரமிப்பு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், பயங்கரவாதத்தையும் அடக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என ஐ.சி.சி. தலைவர் சோவ் கூறினார்.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களின்போது ரோம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கவில்லை. எனவே ஐ.சி.சி.க்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் அறிவுறுத்தலின்றி எதுவும் செய்யமுடியவில்லை.
ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத இலங்கை, இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் விவகாரத்தில் ஐ.சி.சி. இனால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறினார்.
ஐ.சி.சி.க்கு அங்கீகாரம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால் ரோம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு அமையவே நாம் செயற்படமுடியும் என சோவ் கூறினார். (DM)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’