நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் பாதுகாப்பதற்காக உயர்மட்டக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.க. பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்படி கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில்,
'எமது நாடும் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியான ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. காரணம் தற்போதுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் சொத்துக்களையும் நிதியையும் பச்சையாகவே கொள்ளையடித்து வருவதுடன் மக்களின் நலனையும் கெடுக்கின்றனர். இவ்வாறானதொரு ஆட்சியிலிருந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமாயின் அதற்கு பலம்வாய்ந்ததொரு எதிர்க்கட்சி தேவைப்படுகிறது.
ஜனநாயக ரீதியில் பலத்தைப் பெற்று மக்களின் ஏகோபித்த அனுமதியுடன் நாட்டை சிறந்தவொரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான கட்டாயத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி தற்போது தள்ளப்பட்டுள்ளது. ஆனால் கட்சியை சீரமைத்து, பலம்வாய்ந்த கட்சியாக முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உள்வீட்டுப் பிரச்சினைகளால் கட்சி பிளவுபடுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை. பிளவு இன்றிய கட்சியாக ஐ.தே.க.வை பலம்வாய்ந்ததொரு பாதையில் கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவின. அதனால் கடந்த தேர்தல்களில் எமது கட்சி படுதோல்வியைத் தழுவியது. இதனால் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நாம் தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இவ்வாறானதொரு நிலையில், நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் நாம் எவ்வாறான முயற்சிகளை எடுக்க முடியும். அதனாலேயே, கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகளின் போது இரு தரப்புக்கும் மத்தியஸ்தம் வகித்து கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்தி வந்த ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.
எமது வேண்டுகோளுக்கு இணங்க, இன்றேனும் கட்சியைப் பொறுப்பேற்க தயார் என அவர் தெரிவித்தார். தனது முடிவு குறித்தும் வெகு விரைவில் கரு ஜயசூரிய அறிவிப்பார். அதன்மூலம் மக்களின் ஆசீர்வாதத்துடன் கட்சியை பலப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற்று அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்' என்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’