வட மாகாணத்தின் ஆளுநராக நான் ஒரு காலத்தில் பணியாற்றியுள்ளேன். அதற்கு முன்பதாக வட பிராந்தியத்திற்கான கடற்படைக் கட்டளைத் தளபதியாக நான் பணியாற்றியுள்ளேன். எனவே உங்களது பிரச்சினைகள் யாவற்றையும் நான் உணர்வுப் பூர்வமாக அறிவேன். உங்களது பிரச்சினைகளை உங்களது தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கூறுங்கள். 90 களிலிருந்து உங்களுக்காகவே அவர் பாடுபட்டு உழைத்து வருகிறார் என்பதை நான் நன்கறிவேன். உங்களுக்கும் அது தெரியும் என கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் வேலணைப் பகுதி கடற்தொழிலாளர் கமத்தொழிலாளர் மற்றும் வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தான் கிழக்கு மாகாண மக்களுக்கும் இருந்தன. இவ்வாறான பிரச்சினைகள் யாவற்றையும் ஒரே இரவில் தீர்த்து விட முடியாது. படிப்படியாகத் தீர்த்து விட முடியும். கிழக்கு மாகாணத்திலே அங்கிருந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக தீர்த்து வைக்கப்பட்டன.
இராணுவத்தினர் தனியார் வீடுகளிலிருந்தும் காணிகளிலிருந்தும் படிப்படியாக வெளியேறினர். இதுபோன்றே இப்போது ஒவ்வொரு பிரச்சினைகளும் அங்கு தீர்க்கப்பட்டுள்ளன.
அதேபோன்று வடமாகாணத்தில் இப்போது பிரச்சினைகள் யாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தீர்க்கப்பட்டு வருகின்றன.
இன்னும் ஓரிரு வருடங்களில் இப்பகுதி நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல் அல்லது அவற்றை விட மேலான அபிவிருத்தியினைக் காணும் என்பது நிச்சயம். இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அயராது உழைத்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது மேற்படி சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளைக் காண்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’