தனது கணவனுக்கு மது போதையேற்றி அவரை கட்டிலில் கட்டிவைத்து ஆணுறுப்பை துண்டித்து குப்பையில் எறிந்த குற்றத்திற்காக பெண்ணொருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்துப்பட்டுள்ளார்.
தெற்கு லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கத்தரின் பெக்கர் எனும் 48 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விபரிக்கையில், 'குறித்த பெண் வீட்டில் இரவு உணவின் போது அவரது கணவனை கொல்வதற்காக உணவில் நஞ்சை அல்லது போதைப்பொருளொன்றை கலந்துக் கொடுத்துள்ளார். அம்மனிதர் எழுந்து பார்க்கும்போது அவர் கட்டிலுடன் சேர்த்து கட்டப்பட்டு அசைய முடியாதவாறு கிடந்துள்ளார். அதன்பின் அவரது மனைவி கத்தியொன்றினால் அவரது ஆணுருப்பை துண்டித்து குப்பையை அழிக்கும் இயந்திரமொன்றில் எறிந்து அந்த இயந்திரத்தை இயக்கியுள்ளார்' எனத் தெரிவித்தனர்.
அதன்பின்பு அவசர சிகிச்சைப் பிரிவு இலக்கமான 911 தொடர்புக்கொண்டு அவசர மருத்துவ சிகிச்சை தேவை என கத்தரின் பெக்கர் கோரியுள்ளார்.
அதிகாரிகள் அங்கு விரைந்தபோது, 52 வயதுடைய மேற்படி நபர் இரத்தம் வழிந்தோடிய நிலையில் காணப்பட்டார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
பொலிஸார் அவ்வீட்டை சோதனைக்குட்படுத்தியப்போது கத்தியொன்றும் கயிறும் காணப்பட்டுள்ளது.
இருவரும் திருமணம் முடித்துள்ளனர். ஆனால் விவாகரத்து பெறுவதற்கான செயன்முறைகளை மேற்கொண்டுள்ளனர் என லெப். ஜெப் நைட்டிங்கேல் என்பவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அம்மனிதரை பார்த்தபோது, 'அதற்கு அவர் தகுதியானவர்' என கத்தரின் கூறினாராம்.
இந்நபரின் அந்தரங்க உறுப்பு நிரந்தரமாக இழக்கப்படச் செய்வதை அப்பெண் நோக்கமாகக்கொண்டிருந்தார் என நைட்டிங்கேல் மேலும் தெரிவித்துள்ளார்.
மோசமான வன்முறை பிரயோகம், பெருங் குற்றச்செயலை மேற்கொள்ளும் நோக்குடன் போதையேற்றியமை, உயிர்ச்சேதம் விளைவிக்கக் கூடிய ஆயுததத்தால் தாக்கியமை, போன்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அப்பெண் தற்போது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’