வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஜூலை, 2011

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வன்முறைகள் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களைக் குழப்பத்திற்குள்ளாக்கும் வகையில் உச்ச அளவிலான பொய்ப் பிரச்சாரங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களின் மீது வன்முறைகளையும் பிரயோகித்துள்ளனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இச் சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கும் கிளிநொச்சி உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் இன்று மதியம் முறைப்பாடு ஒன்றை எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த முறைப்பாட்டில் கரைச்சிப் பிரதேச சபைப் பிரிவிலுள்ள கனகாம்பிகைக்குளம் வாக்குச் சாவடியில் கிராமசேவையாளர் ஒருவர் பகிரங்கமாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களை அறிவுறுத்தியமையைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைப் பிரதேசத்திலுள்ள சோறன்பற்றுப் பகுதியில் தொலைபேசி மூலம் மக்களையும் ஆதரவாளர்களையும் மிரட்டிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதையும் தெரியப்படுத்தியிருந்தார்.
தங்கள் வீடுகளில் இருந்து வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வந்த மக்களை வீதிகளில் வைத்து வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவில் அழைத்து வரப்பட்ட இளைஞர்களைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கும் உதயசூரியன் சின்னத்துக்கும் வாக்களிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டமையை தேர்தல் ஆணையாளருக்குத்தாம் அறிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’