வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 ஜூலை, 2011

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு

த்ய சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்தில் 6.09 கிலோ தங்கம், 245.36 கிலோ வெள்ளி, ரூ.80.50 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் குவிந்து கிடக்கும் சொத்துக்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கிருந்து 100 கிலோவுக்கு மேல் தங்கம், 300 கிலோவுக்கு மேல் வெள்ளி மற்றும் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூர், ஒயிட் பீல்டில் சத்ய சாய் பாபாவின் பிருந்தாவனம் ஆசிரமம் உள்ளது. அங்குள்ள சொத்துக்களை மாவட்ட கலெக்டர் துணையுடனும், பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் சாய் அறக்கட்டளையினர் கணக்கெடுத்தனர்.
அப்போது 6.09 கிலோ தங்கம், 245.36 கிலோ வெள்ளி, ரூ.80.50 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாய்பாபா ஓய்வெடுக்கும் அறை மற்றும் பார்வையாளர்களை சந்திக்கும் அறையில் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் குவிந்து கிடந்தன. இதில் தங்க நகைகள், பதக்கங்கள், நாணயங்கள், தங்க பூஜை பொருட்கள் அடக்கம்.
கடந்த 1960-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பெங்களூர் ஆசிரமத்தை சாய் பாபா திறந்து வைத்தார். தான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் சாய் பாபா அந்த ஆசிரமத்தில் தான் தங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’