மட்டக்களப்பு, புதூர் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ள இரகசிய பொலிஸார் அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கிருஷ்ணன் சபேஷ் அந்தோனிதாஸ், மற்றும் கிருஷ்ணன் ரமேஷ் ஆகிய இருவருமே மேற்படி வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
பின்வரும் புகைப்படங்களில் காணப்படும் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 011 – 2328138 மற்றும் 011 – 2422176 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும்.
மேற்படி சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குவோர் தொடர்பான விபரங்கள் இரகசியமாகப் பேணப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’