வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 ஜூலை, 2011

ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே இழந்தவற்றை பெற முடியும்: சிவகீதா

டபகுதி தமிழ் மக்கள் ஆழும் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே 30வருட யுத்தத்தில் இழந்தவற்றை பெறமுடியும் என்று மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிவகீதா பிரபாகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'வீரவசனங்கள் பேசுபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் மீண்டும் நமது மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லப் போகிறார்கள். வடபகுதி தமிழ் மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பதன் மூலமும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமும்தான் 30வருட கால யுத்தத்தின் அழிந்து போன எமது மண்ணைக் கட்டியெழுப்ப முடியும்.
வடபகுதி தமிழ் மக்கள் ஆழும் ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணிக்கு வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாநரக சபை சார்பான வடபகுதி தமிம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’