கிளிநொச்சியில் நேற்று நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான மனோ மற்றும் கிரிஷ், சுசித்ரா, ஆகியோர் பங்கேற்க இருந்த போதிலும், தமிழக தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காது மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர்.
கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தேசிய விளையாட்டு மைதான அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர்களான மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
மனோ உள்ளிட்ட மூன்று பேரின் இந்தப் பயணத்திற்கு ம.தி.மு.க. செயலாளர் வைகோ மற்றும் பழநெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மனோ உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்தே சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
இது குறித்து
கருத்துத் தெரிவிக்கையில்: என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சகளுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கிளிநொச்சியில் விளையாட்டு மைதான திறப்பு விழாவிற்காக இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை ஏற்பாட்டாளர்கள் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன் தமிழ் பாட்டுக்களைப் பாடலாம் என்று நாங்கள் இதற்கு ஒப்புக் கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கலந்து கொள்கிறார் என்பது தெரியவந்தது. பல பெரியவர்கள் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்தவிடயம் எமக்கு தெரியவந்தது.
நாங்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்னக் கஷ்டம் வருவது போல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன். நானும் பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகின்றோம். நாம் கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் என்றும் நன்றி உடையவர்களாகவே இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’