மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தையும் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் பொறுப்பெடுத்து அதனை செயற்படுத்தி வருகின்றவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டியது மக்களின் மிகப்பெரிய பொறுப்பாகுமெனவும் அந்த வழியில் இன்று செயற்படுகின்றவர்களான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரை நாம் அனைவரும் ஓரணியில் நின்று ஆதரிக்க வேண்டும் என அருட்தந்தை ஜேசுவா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) மாலையாள்புரம் திருவள்ளுவர் முன்பள்ளி விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களின் வறுமையை பற்றி பேசுவதனால் அரசியலைப்பற்றி பேச வேண்டும் பிரதேசங்களின் அபிவிருத்திப்பற்றி பேசுவதனால் அரசியல்பற்றி பேசவேண்டும் இது தவிர்க்க முடியாதது ஒரு மத குருவாக இருந்து கொண்டு அரசியல் பற்றி பேசுகிறேன் என நினைக்கவேண்டாம் மக்களின் வறுமையை போக்கி பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டும் என்றால் நாம் அரசியல் பற்றி பேசிதான் ஆக வேண்டும் எனவே அன்பிற்குரிய மக்களே கடந்த காலங்கள் போன்று மக்கள் தனித்தனியே சிதைந்து நின்று தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது அதில் எவ்வித நன்மையும் இல்லை எனவே மக்கள் அனைவரும் ஒன்றாக ஒரணியில் ஓரே தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும். மக்களுக்காக செயற்படுகின்ற சரியான அரசியல் தரப்பினரை மக்கள் ஆதரிக்க வேண்டுமென அருட்தந்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான சந்திரகுமார் அவர்கள் இப்பிரதேசம் கடந்த காலங்களில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை நாம் நன்கறிவோம். எனவே அந்த கடந்த கால தவறுகள் போன்று இனிமேல் நடக்காது. இப்பிரதேச மக்களின் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பு அதனை நாம் நிச்சயம் மேற்கொள்வோம் குறிப்பாக இப்பிரதேச மக்களின் பிரதான எதிர்பார்பான மின்சாரத்தை ஒரு மாதத்திற்குள் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு இப்பிரதேசத்திற்கான ஒரு ஆரம்ப பிரிவு பாடசாலையினை அமைப்பதற்கு எம்மால் நிச்சயம் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் ஆனால் அதற்கு முன் இக்கிராம மக்கள் அதிகளவான மாணவர்கள் உள்ளதனை உறுதிப்படுத்தவேண்டும் என சந்திரகுமார் அவர்கள் கேட்டுகொண்டார்.
கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சேகர் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. பிரதேச சபை வேட்பாளர் ஜோசேப் கிருஸ்ணசாமி பிரதேச இராணுவ அதிகாரி கேணல் ஜெயதிஸ்ஸ கிராம அலுவலர் சந்திரபாலன் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’