பிரித்தானியாவில் தமிழக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியவை தமிழ்க் கூட்டமைப்பின் கருத்தல்ல என்கிறார் அரியநேத்திரன். அரியேந்திரன் மேலும் கூறுகையில்
பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்த கூற்றை கொண்டு அது கட்சியினுடைய கருத்தாக கருதுவது தவறானது. .அந்த வகையில் லண்டனில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தவற்றை கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுப்பது தவறானது என்று சடைந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அங்கு அவர் தெரிவித்தவை அவரது கருத்தாகவுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. எமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுப்பதாயின் கட்சியிலுள்ள எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்தையும் கவனத்தில் கொண்டு முடிவினை மேற்கொள்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரோ அல்லது விரோதமானவரோ அல்ல. என்று சுமந்திரனுக்கும் ஒரு வக்காளத்து வாங்கி தனது கருத்தை தெரிவித்தார் அரியேந்திரன்.
இச்சம்பவத்தில் இருந்து ஒன்றை நாம் நன்கு அறியக் கூடியதாக உள்ளது. அதாவது இலங்கை அரசை போர்குற்றவாளியாக இந்த கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான். இதனால் தான் இலங்கை அரசு இந்த தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது. இவர்கள் 10 தடவைகள் பேச்சுக்களை நடத்திய போதும் இன்னமும் எந்த தீர்வுக்கும் எட்டவில்லை என்பதை விட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் அரசுக்கும் இடையிலான பேரம் முடிவடையவி;ல்லை என்றே கூற வேண்டும்.
மேற்கத்தேய நாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வைத்து ஒரு தீர்வை முன்தள்ள முயற்சித்து வருவது எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில் தான் சுமந்திரனின் பேச்சும் அடங்கியுள்ளது. இன்னும் ஒரு வேடிக்கை சுமந்திரன் கூறியது கட்சியின் கூற்றல்ல மாறாக அவரின் தனிப்பட்ட கருத்து என்றால் இவ்வாறான தமிழின விரோதக் கருத்தைக் கொண்டவர் எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது. இது புலத்து புலிகள் உட்பட தமிழ் குறுந்தேசிய வாதிகளின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’