சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள், சிந்தனையாளர்கள் முன்னிலையில் ஹிலாரி உரையாற்றினார்.
'வணக்கம்' என்று தமிழில் கூறி ஹிலாரி கிளின்டன் தனது உரையை ஆரம்பித்தபோது பார்வையாளர்களின் கரகோஷசத்தால் அரங்கம் அதிர்ந்தது.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முதலாவது அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது பாரம்பரிய பூகோள நலன்களை தெற்காசியாவிலிருந்து அயற் பிராந்தியங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார்.
"பயங்கரவாதத்தை முறியடிப்பதிலும் பொருளாதார சுபீட்சத்தை அடைவதிலும் நாம் பொது அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளோம்.
நாம் வெவ்வேறு பின்னணியைக் கொண்ட நாடுகள் என்பது உண்மைதான். அவ்வப்போது நாம் முரண்படுவோம். ஆனால் எமது பேதங்களை எமது பிணைப்பு விஞ்சுகிறது.
இந்தியா தலைமை தாங்குவதற்கான தருணம் இது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனான பொருளதார ஒருங்கிணைப்பிற்கும் ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் மேலும் உறுதியான பாத்திரத்தை வகிப்பதற்கும் இந்தியா மேலும் பலவற்றை செய்யவேண்டும்.
உலகளாவிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் கூட்ட அறைகளிலும், மாநாட்டு மண்டபங்களிலும் இந்தியா இன்று தனக்குரிய இடத்தை பெறுகின்றது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர இடம்பெறுவதை எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியதன் மூலம் இதை அங்கீகரித்துள்ளார்" என ஹிலாரி கிளின்டன் கூறினார். "1352556969";
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’