வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 ஜூலை, 2011

நாட்டை கூறுபோட ஒருபோதும் இடமளியேன்: கோப்பாயில் ஜனாதிபதி

ந்த நாட்டை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது, 'நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
இனவாத அரசியல் இனி வேண்டாம். இனம், குலம் பார்த்து நான் வேலை செய்வதில்லை. ஏன் என்றால் நான் இந்த நாட்டின் தலைவன். நீங்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறீர்கள் என நான் அறிகிறேன்.
இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாதம் வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இனி நீங்கள் யோசியுங்கள். நாம் அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’