மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கை கட்டாயம் பரிசீலிக்க வேண்டுமென மாற்றலாகி செல்லும் முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமாராவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் "ஹெட்லைன்ஸ் டுடே' ஊட கத்திற்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, இக் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த முடியாது. சனல்4 காணொளியின் படி யுத்தத்தின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.
இது யுத்த வலய சோகச் சம்பவங்கள் ஆகும். சில சம்பவங்கள் பற்றி இந்தியா தொடர்ந்தும் இலங்கையுடன் பேச்சுகளை நடத்தும். மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை தவிர்க்க வேண்டும். இலங்கையின் அயல் நாடு இந்தியா என்பதால் தான் நாங்கள் நேரடியாக பேசவேண்டியுள்ளது. யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை நோக்கும் போதும், காயப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்களைக் கணக்கிடும் போதும் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தம் ஒரு சோக சம்பவம் தான்.
வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குரோதங்கள் களையப்பட்டு சிறுபான்மையினரின் அபிலாஷைகள் கவனிக்கப்பட வேண்டும். அவர்களும் அந்நாட்டு பிரஜைகளே. அவர்களும் நாட்டின் சுபீட்சத்திற்காக பங்களிப்பு செய்யக் கூடியவர்களே என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’