வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஜூலை, 2011

வான் அகழ்வுப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வல்வெட்டித்துறை பொலிகண்டி மேற்கு கடற்றொழிலாளர்கள் நீண்ட காலமாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வான் அகழ்வுப் பணிகளை அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் (10) தொடக்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஊறணி குடியேற்றத் திட்டம் பொலிகண்டி மேற்குப் பகுதிக் கடற்கரையில் வான் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக வான் அகழ்வுப் பணிகளை கனரக வாகனத்தை இயக்கித் தொடக்கி வைத்தார்.

இதன் மூலம் 1000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடையவுள்ளதுடன் தரையிலிருந்து கடலுக்கும் கடலிலிருந்து தரைக்கும் படகுகளை இலகுவாகக் கொண்டு செல்ல முடியும் எனவும் கடற்றொழிலாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதி கடற்றொழிலாளர்களுடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடி அவர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கேஸ்வரன் ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிறீபதி மாஸ்டர் வடமராட்சி வடக்கு கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஆகியோரும் உடனிருந்தனர்.




























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’