வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 ஜூலை, 2011

'தேர்தல் ஆர்வமின்றி யாழ் மக்கள்'

லங்கையின் வடக்கில் வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் அங்குள்ள மக்கள், குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் மத்தியில் ஆர்வமற்ற தன்மையே காணப்படுகின்றது.
இந்தத் தேர்தல் குறித்து ஒருசிலர் நம்பிக்கை வெளியிட்டபோதிலும் பலர் தேர்தலின் பலன் குறித்து கேள்வி எழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள்.


இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பான 8 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையடுத்து, நிலைமைகளை ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் அவர்கள் தலைமையில் முக்கிய சந்திப்பு இன்று காலை யாழ் அரச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் இராணுவ அதிகாரிகளும் சமூகமளித்திருந்தார்கள். அங்கு சமூகமளித்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும இடையில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இங்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நியாயமான ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு வசதியாக வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்களினால் செய்யப்பட்டுள்ள எட்டு முறைப்பாடுகள் தொடர்பாகவும் பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ இங்கு விளக்கமளித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் கருத்து வெளியிட்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள் நீதியும் நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் திடசங்கற்பம் பூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’