கனடாவில் வாழ்கின்ற மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கனேடிய தமிழ் காங்கிரஸ், இலங்கையில் பிறந்தவரும் பயங்கரவாத நிபுணருமான ரொஹான் குணரட்ன மீது மானநஷ்ட வழக்கொன்றை கனடாவின் ரொஹன்டோவில் தாக்கல் செய்துள்ளது.
ரொஹான் குணரட்ன இலங்கையின் 'லக்பிம' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எல்.ரி.ரி.ஈ.யினர் கனடாவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர் என கூறியிருந்தார்.
இந்த கூற்றினால் கனேடிய தமிழ் காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை களையும் முகமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளரான டேவிட் பூபாலப்பிள்ளை கூறினார்.
டேவிட் பூபாலபிள்ளையும் கனேடிய தமிழ் காங்கிரஸின் இயக்குநர்களில் ஒருவருமான உமாசுதன் சுந்தரமூர்த்தியும் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
குணரட்னவுக்கு சிங்கப்பூரில் வழக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர் அதற்கு இன்னும் பதில் அனுப்பவில்லை. இவரது பேட்டியை பிரசுரித்த லக்பிம செய்தி நிறுவனமும் வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளது என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்தது.
(டைம்ஸ் ஓவ் இண்டியா)
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’