இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் டோனி பந்து வீசினார். முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் அவர் பந்து வீசினார். ஆனால் இதற்கு கபில்தேவ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
டோனி 8 ஓவர்கள் வீசி 23 ஓட்டங்களை கொடுத்தார். ஒரு விக்கெட் கைப்பற்ற வேண்டிய நிலையில் மூன்றாம் நிலை நடுவரின் முடிவால் பீட்டர்சன் ஆட்டமிழப்பில் இருந்து தப்பித்தார். டோனி பந்து வீசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 3 முறை டெஸ்டில் பந்து வீசி இருக்கிறார்.
விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் 2 ஓவர் வீசி 14 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே விக்கெட் கீப்பர்களாக இருந்த செய்யது கிர்மானி, கிரண்மோரே, அஜய் ரத்ரா ஆகியோரும் பந்து வீச்சு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் பந்து வீசியதற்காக டோனியை முன்னாள் அணித் தலைவர் கபில் தேவ் விமர்சனம் செய்து உள்ளார்.
அவர், 'டோனி, தானே முன்வந்து பந்து வீசியது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கேலி-கிண்டல் செய்வது போல் இருந்தது. லோர்ட்ஸ் டெஸ்டின்2-வது நாள் ஆட்டத்தில் டோனியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது அவர் பந்து வீசி இருக்கக் கூடாது. சகீர்கான் ஒரு பொறுப்பான பந்து வீச்சாளர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் கொன்று விட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 474 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் போது 286 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக டிராவிட் 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. முகுந்த் (49), டெண்டுல்கர் (34), பிரவீண்குமார் (17), காம்பீர் (15) ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் பிராட் 4 விக்கெட்களும், டிரிம்லெட் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 188 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’