சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 ஆவது சதம் குவிக்கும்போது விசேட விளம்பரங்களை இந்திய ஊடகங்களில் வெளியிடுவதற்கு பல வர்த்தக நிறுவனங்கள் தயாராகியுள்ளன.
சச்சின் டெண்டுல்கருடன் அனுசரணை ஒப்பந்தம் செய்துள்ள கோக், கனோன், டொஷிபா போன்ற நிறுவனங்களே இதற்குத் தயாராகியுள்ளன.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 சதங்களையும் டெண்டுல்கர் பெற்றுள்ளார். இங்கிலாந்துடானன 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெண்டுல்கர் சதம்குவித்தால் அது சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் 100 ஆவது சதமாக அமையும்.
' சச்சின் 100 ஆவது சதத்தை குவிக்கும்போது செய்தி அலைவரிசைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் உட்பட பல ஊடங்களில் புதிய விளம்பரங்களை வெளியிடுவதற்கு விளம்பரதாரர்கள் தயாராகி வருகின்றனர்' என ஸெனித் ஒப்டிமீடியா நிறுவனத்தின் உபதலைவர் நவின் கேம்கா தெரிவித்துள்ளார்.
சச்சினின் 100 ஆவது சதத்தை முன்னிட்டு கொகாகோலா நிறுவனம் 65 மில்லியன் விசேட 'சச்சின் கேன்'களை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை காப்புறுதி நிறுவனமான அவிவா, குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு சச்சினை சந்திப்பதற்காக லண்டனுக்குச் சென்றுதிரும்பும் வாய்ப்பை வழங்கவுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’