வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 ஜூன், 2011

தருஸ்மன் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை

ர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கமாட்டாதென்றும் இலங்கையில் யுத்தம் முடிந்த பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அறிக்கைகள் தொகுதியொன்றை தயாரித்துக் கொண்டுள்ளதென்றும் இது சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்படுமென்றும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவை அரசாங்கம் அங்கீகரிக்காததால் அதற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.
இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த முன்னரும் ஐ.நா. செயலாளர் நாயகம் இந்த அறிக்கைக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை கேட்டிருந்தார். அப்போதும் நாம் பதிலளிக்கமாட்டோமென கூறினோம் என அவர் கூறினார்.
இருப்பினும் நாட்டின் இப்போதைய நிலை பற்றி அரசாங்கம் விளக்கமான அறிக்கைகளை தயாரித்துக்கொண்டுள்ளது. இதில்லொன்று ஜனாதிபதி செயலணி மேற்கொண்ட உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் பற்றியது. வடக்கின் நிலைமை பற்றிய விவரணங்களைக் கொண்ட, பாதுகாப்பு அமைச்சாலும் பாதுகாப்பு செயலாளராலும் தயாரிக்கப்பட்ட 120 பக்க அறிக்கையொன்றும் உள்ளதென அவர் கூறினார்.
செயலாளர் நாயகமாக பான் கீ மூன் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை இலங்கை ஏன் எதிர்க்கவில்லையெனக் கேட்டபோது, தனிப்பட்ட வெறுப்பு மற்றும் பகை எமக்கில்லை. இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வசப்படாது பகுத்தறிவு ரீதியாக தீர்க்க வேண்டும். இந்தக் காரணங்களால் தான் நாம் அவருக்கு எமது ஆதரவை வழங்கினோம் என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’