
நேற்றைய தினம் (22) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் முகாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் இப் பிரதேச பாடசாலைகளில் போதியளவு வளங்கள் காணப்படவில்லை போதுமான அளவு கட்டடவசதி இருக்கவில்லை ஆசிரியர் பற்றாக்குறை மேலோங்கி காணப்பட்டது. இவ்வாறான பெரும் வள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ் ஆசிரியர்கள் இடைவிடாது தமது பணியை தொடர்ந்ததோடு மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கு அரும்பாடுபட்டனர். அத்தோடு கடும் யுத்த சூழலிலும் மாணவர்களின் கல்வியை சீரழியவிடாமல் பாதுகாத்த பெருமை இவ் ஆசிரியர்களையே சாரும் எனத் தெரிவித்தார்.
மேலும் இப்பகுதி மாணவர்களின் கல்வித்தரத்தினை உச்சநிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எதிர்வரும் காலங்களில் தென் பகுதி பாடசாலைகளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் இப்பகுதியிலும் ஏற்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தை மேலும் மேம்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம் எனவும் சந்திரகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு குருகுலராஜா கிளிநொச்சி கல்வி வலயத்தில் மீள்குடியேற்றத்தின் பின் இன்றுவரை 89 பாடசாலைகள் மீள இயங்க ஆரம்பித்துள்ளதெனவும் கடந்த காலங்களை விட இன்று பாடசாலைகளின் அபிவிருத்தி துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலம் யுத்தத்தினால் இப் பாடசாலை முற்றாக அழிவடைந்திருந்தது. இந்த நிலையில் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான முகவர் நிறுவனத்தினர் இப்பாடசாலைக்கு இருகட்டடங்களை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் பாடசாலை வளாகத்தின் பிரதான நுழைவாயிலை பச்சிலைப்பள்ளி பிதேசசெயலர் முகுந்தன் திறந்துவைத்தார் தொடர்ந்து பிரதான கட்டடத்தினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் திறந்து வைத்தார். அடுத்து சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான முகவர் நிறுவனத்தின் பிரதிநிதி சிமோன் சொனன்பேக் வகுப்பறைத் தொகுதியினைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான முகவர் நிறுவனத்தின் பிரதிநிதி ஜெனிவன் கொன்றோசோ அதன் பிரதம பொறியியலாளர் சிறீகாந்தா மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’