எ மது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்த அரிய சந்தர்ப்பம் ஒன்று மறுபடியும் இப்போது கனிந்திருக்கிறது. கடந்த காலங்களில் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தவறவிட்ட அனுபவங்களை படிப்பினைகளாகக் கற்றுக்கொண்டு இனியாவது சக தமிழ் தலைமைகள் சசந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன் படுத்த முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் உரிமை என்பது வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான விடயமல்ல. தேர்தல் வெற்றிகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வெற்றுக்கோசமும் அல்ல. அது அடைந்தே தீரவேண்டிய எமது மக்களின் மாபெரும் சொத்து. தமிழ் மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுப்பதற்கான அரிய பல சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் கனிந்து வந்திருந்தன. ஆனாலும் அவைகளை அவ்வப்போது சக தமிழ் தலைமைகள் சரிவரப்பயன்படுத்த விரும்பாத காரணத்தால் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்கான தீர்வு என்பது இறுதி வரை தீராப்பிரச்சினையாகவே நீடித்து வந்திருக்கின்றது. இதனால் அழிவுகளும் அவலங்களும் வதைகளும் வலிகளும் மட்டுமே தமிழ் மக்கள் சந்தித்திருந்த துயர வரலாறாகும்.
இது துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் சொல்லியழும் காலமல்ல. அழிவுகளிலும் இழிவுகளிலும் இருந்து நாம் நிமிர்ந்தெழ வேண்டிய காலம். அழிவுகள் நடந்தன என்பது உண்மையாயினும் அந்த அழிவுகளுக்கு அடுத்தவர்களே காரணம் எனக் கூறுவதை விடவும் தமிழ் தலைமைகள் தாம் விட்ட தவறுகளையும் உணர்ந்து கொண்டு நடந்து முடிந்த தமிழ் மக்களின் அழிவுகளுக்கு பரிகாரம் தேட முன்வரவேண்டும்.
கண்கெட்ட பின்பு சூரிய வணக்கம் என்பது போல் தமிழ் மக்கள் அழிபட்டு வதைபட்டு நிற்கும் இந்த சூழலிலாவது இலங்கைத் தீவின் பக்கம் சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. போர்க்குற்றம் என்று கூறி அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் அழிவுப்போரின் பின்னராவது தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற விருப்பங்களே சர்வதேச நாடுகளின் விருப்பங்களாக தெரிகின்றன.
இதே வேளை எமது அயலக நட்பு நாடாகிய இந்தியாவின் மத்திய அரசு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த சில காலங்களை விடவும் இப்போது அதிக அக்கறைக் காட்டுவதாகத் தெரிகிறது. நட்பு நாடி தேடி வந்து நல்லெண்ணங்கள் குறித்து இந்தியா பேசி வருகிறது. இவைகள் எமக்கு சாதகமான ஒரு சூழலாகும்.
அழிவு யுத்தத்தின் மூலமே எதையும் பெற முடியும் என்ற விருப்பங்களோடு தொடர்ந்தும் ஆயுதப்போரை நடத்தியதோடு அரசியல் தீர்வுக்கும் சுமுகமான அமைத்திப்பேச்சுக்கும் இறுதிவரை உள்மன விருப்பமின்றி தடையாக இருந்து வந்த புலிகளின் தலைமை இல்லாதொழிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில் அரசியல் தீர்வின் பக்கம் அணிதிரண்டு வருவதற்கு தமிழ் மக்கள் அச்சப்பட வேண்டிய தடைகளும் இப்போது இங்கில்லை.
அது போல் தென்னிலங்கை அரசியல் சூழலிலும் சாதகமான ஒரு நிலைமை கனிந்திருக்கிறது. பலமுள்ள அரசாங்கம் மட்டுமே எதையும் சாதிக்க முடிந்த வல்லமை கொண்டது. அந்த வகையில் தென்னிலங்கை மக்களின் பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு இன்று பெற்றிருக்கிறது. சகல மக்களும் ஏற்றுக்கொள்ள முடிந்த தமிழ் மக்களுக்கான அரசியல் தீரவின் இலக்கு நோக்கி நகர்வதற்கான ஆரம்பங்களை முன்னெடுப்பதற்கு தென்னிலங்கை மக்களும் இப்போது தடையின்றி தயாராகவே உள்ளார்கள். அதற்கான அங்கீகாரத்தை தென்னிலங்கை மக்களிடம் இருந்து இன்று அரசாங்கம் பெற்றிருக்கிறது.
சகல தடைகளும் அகற்றப்பட்டு அரசியல் தீர்வு காண்பதற்கான சூழல் ஒன்று மறுபடியும் கனிந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சனைக்கான தீர்;வினை அடைவதற்கு வழமைபோல் தடையாக இருந்து வருபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதில் ஆரம்பித்து அதிலிருந்து முன்நோக்கி நகர்வதே இன்று நடை முறைக்கு சாத்தியமான வழிமுறையாகும்.
இன்றைய உலகத்தின் போக்கின்படி இதையே இந்தியா உட்பட சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதிலிருந்து தொடங்குவதற்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைக்கு சாத்தியமாகாத கோரிக்கைகளை முன்வைத்து எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை குழப்பி தடை போட்டு அரசியல் தீர்வினை அடைவதற்கு மாறாக காலம் கடத்தும் கபட நோக்கில் செயற்பட முற்படுவதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.
இன்றைக்கு எது சாத்தியமோ அதை தவிர்த்து இன்றைய சூழலில் சாத்தியமாகாத கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தி வருவது சுயலாப அரசியலை மட்டுமே.
வெறும் தேர்தல் வெற்றிகளுக்காக முன்னோக்கிய அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு தடைக்கற்களாக இருப்பதை தவிர்த்து தமிழ் மக்களின் அரசியலுரிமைகளை அடைவதற்கான படிக்கற்களில் ஏறி நடந்து மனம் மாறி வரவேண்டும் என்றும் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக கொதிநிலையில் வைத்துக்கொண்டு அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை கைவிட்டு நல்ல சிந்தனையோடு செயற்பட முன்வரவேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நாம் எமது மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கடந்த காலங்களில் கனிந்து வந்த சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்த மறுத்த தமிழ் தலைமகள் தமிழ் மக்கள் அழிவுகளையும் அவலங்களையும் சுமப்பதற்கு வழி தேடியதுபோல் அன்றி இனி வரும் காலங்களிலாவது கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்களை மதிநுட்பத்தோடும், சாணக்கிய தந்திரங்களோடும் அணுகி தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர நிம்மதியை உருவாக்க முன்வரவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’