வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 ஜூன், 2011

ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

மு தல்வர் ஜெய‌ல‌லிதாவை ம‌க்களவை எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ரும் மூத்த பாஜக தலைவருமான சு‌ஷ்மா சுவரா‌ஜ் ‌இ‌ன்று ச‌ந்‌‌‌தி‌த்துப் பே‌சினா‌ர்.
செ‌ன்னை போய‌ஸ் கா‌ர்ட‌னி‌ல் உ‌ள்ள இ‌ல்ல‌த்தில் இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்பு நடைபெ‌ற்றது. முதல்வராகப் பொறு‌ப்பே‌ற்ற ஜெய‌‌ல‌லிதாவு‌க்கு அ‌ப்போது அவ‌ர் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டா‌‌ர்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய சுஷ்மா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பாஜக குரல் எழுப்பும் என்றார்.
கடந்த 2 நாட்களாக சென்னையில் நடந்த தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.

நீலகிரி, சிவகங்கை மாவட்ட அதிமுக மா.செக்கள் மாற்றம்

இந் நிலையில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் சோழன் சித.பழனிச்சாமி எம்.எல்.ஏயும், சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஆர்.முருகானந்தமும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.முருகானந்தமும், சிவகங்கை மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர் பொறுப்பில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவனும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.செல்வராஜ் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் புத்திசந்திரன் (குந்தா ஒன்றிய கழக செயலாளர், சுற்றுலாத் துறை அமைச்சர்), நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் எம்.செல்வராஜ் (அடார் எஸ்டேட், ஸ்பிரிங்பீல்டு அஞ்சல், குன்னூர்) ஆகியோர் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’