இ லங்கை மீது பொருளாதார தடைவிதிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,
'ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு, அவர் நியமித்த இலங்கை தொடர்பான நிபுணர் குழு சமர்பித்த அறிக்கையில் பொறுப்புக்கூறும் கடப்பாடுகளை தொடர்பாக பல விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றுமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகளின்போதும் பல விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென இந்திய அரசாங்கம் வலியுத்தியிருந்தது. அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தைகளின்போதும் நாம் இவற்றை வலியுத்தியிருந்தோம். ஆனால், இலங்கை அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
இந்த பின்னணியில்தான் இலங்கைக்கு பொருளாதார தடைவிதிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்வைத்த பிரேரணை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகவே, இனியாவது இலங்கை அரசாங்கம் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும். எவரும் இல்லாதுபோயிருந்தால் எப்படியான சந்தர்ப்பத்தில் அது நடந்து என அறிவிக்க வேண்டும்.
அரசாங்கம் இதை செய்யத் தவறுவதால்தான் வெளிநாடுகளிலிருந்து இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆகவே இலங்கை அரசாங்கம் தான் இவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும். எதிர்காலத்திலாவது இத்தகைய அழுத்தங்கள் அதிகரிக்காமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகிறது' என்றார்.
வரவேற்பு
இதேவேளை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத்தடை என்ற தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தமிழக மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர தொடர்ந்தும் பாடுபடவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.அரியநேத்திரன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
'இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம். இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக எமது உரிமைகளை நசுக்கிக்கொண்டே வருகின்றது.
கடந்த 2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தார்கள். அவர்களின் வாழ்விடங்கள் தரைமட்டமாகி சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னுமே அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் இருப்பதைக் காணலாம்.
விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடும் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புகள் தமிழர் பகுதிகளில் தொடர்வதுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிபோய்க்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஐ.நா. சபையும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும்படி கோரி அறிக்கை வெளியிட்;டுள்ளது. இந்த அறிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அத்துடன் தற்போது தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதுடன் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’