இ லங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (14) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2011 - 2012 தொழில்நுட்பவியலில் இளமாணி தொழிநுட்பவியலில் டிப்ளோமா மற்றும் அத்திவார மட்டப் பாடநெறி நிகழ்ச்சித் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அவர்கள் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கும் போது உயர் கல்வி அமைச்சு மற்றும் ஏனைய நிதி வழங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி இந்நிறுவனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதுடன் இவ்வாறான வாய்ப்புக்களை உரிய அனைவரும் நன்கு பயன்படுத்தி தங்களதும் எமது சமதாயத்தினதும் முன்னேற்றம் கருதி செயற்பட முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
பிராந்திய நிலைய இணைப்பாளர் கி. கந்தவேள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எந்திரவியல் தொழில்நுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் டபிள்யூ.ஏ. விமலவீர யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பொறியியலாளர்களான என். உதயகுமார் கோமதி வாமதேவன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
இறுதியில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் சிறந்த திறமைகளை வெளிடுப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’