இ லங்கையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து தம்முடன் அரசு பேசி வரும் நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்படுவதற்கான தேவை இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தர் பேட்டி
1984 ஆம் ஆண்டுக்கு பிறகு இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயப்படாத விடயம் ஏதும் இல்லை என்றும் பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார். இந்த விடயத்தை பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு மேலும் விவாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகும் என்று நம்புவதற்கு முற்றிலும் இடமில்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
இலங்கையில் முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விட தற்போது இருக்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் கூடுதலாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய சம்பந்தர், அரசியல் தீர்வு குறித்து ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு தெரிவுக்குழுகான தேவை தற்போது இல்லை என்பதே தமது நிலைப்பாடு என்றார்.
செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ஜனாதிபதி இலங்கை இனப் பிரச்சனை குறித்த ஒரு தீர்வுத் திட்டத்தை நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அமல்படுத்த முடியும் என்று தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுடன் கடந்த ஆறு மாதங்களாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் இரண்டாவது சபையை ஏற்படுத்த வேண்டும் என்கிற கருத்தை தவிர வேறு எந்தப் பிரேரணையும் தம்முன்னர் அரசால் வைக்கப்படவில்லை என்றும் சம்பந்தர் தெரிவிக்கிறார்.
நாட்டில் இரண்டாம் சபை என்பது, நியாயமான உறுதியான அதிகாரப் பகிர்வுக்கு ஒரு மாற்றாக அமைய முடியாது என்றும், மத்திய அரசுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையே ஒரு நியாயமான நிரந்திரமான அதிகாரப் பகிர்வு என்கிற கருத்தையே தாங்கள் முன்வைத்துள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’