த மிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு இந்தியாவினால் தான் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
'13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை என அவர் கூறினார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் இலங்கை விஜயம் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், அவர்கள் வழக்கமான இரு தரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்திய உயர் மட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்த யோசனை முன்வைத்ததை சிவ் சங்கர் மேனன் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது காலம் கடத்தும் தந்திரமல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 'எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் எந்தத் தீர்வையும் நான் அங்கீகரிப்பேன்' என அவர் கூறினார்.
இச்சந்திப்பில் பங்குபற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஐ.நா. அறிக்கையில் அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கவில்லை எனக் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’