வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 ஜூன், 2011

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

மி ல்லியனர்களின் (கோடீஸ்வரர்களின்) எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் 10 ஆசிய நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது.

ஹொங்கொங், வியட்நாம் ஆகியன இதில் முதலிடத்தில் உள்ளன. அந்நாடுகளில் 33 சதவீத வருடாந்த அதிகரிப்பு காணப்படுவதாக அமெரிக்க வங்கியின் செல்வ வள முகாமைத்துவப் பிரிவான 'மெரில் லின்ச்', அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங், வியட்நாமுக்கு அடுத்ததாக இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா ஆகியன உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடத்தில் இலங்கை உள்ளது.
கடந்த வருடம் முதல் தடவையாக ஐரோப்பாவைவிட ஆசியாவில் அதிக எண்ணிக்கையான மில்லியனர்கள் இருந்ததாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடந்த வருடம் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் சொத்துக்களைக்கொண்ட (அவர்களின் வீடுகள் நீங்கலாக) மக்களின் எண்ணிக்கை 3.3 மில்லியனாக இருந்தது. இது முந்தைய வருடத்தைவிட 10 சதவீதம் அதிகமாகும்.
இதன்படி 3.1 மில்லியன்; மில்லியனர்களைக் கொண்ட ஐரோப்பாவை ஆசியா முந்தியுள்ளது.வட அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது. அங்கு செல்வந்தகர்களின் எண்ணிக்கை 8.6 சதவீதத்தால் அதிகரித்து 3.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.
விரைவில் வட அமெரிக்காவை ஆசியா முந்திவிடும் என மெரில் லின்ச் நறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர்களில் ஒருவரனான வில்சன் ஸோ கூறியுள்ளார்.
இதேவேளை உலகிலுள்ள ஒருகோடியே 10.9 மில்லியன் மில்லியனர்களில் அரைவாசிப் பேர் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி ஆகிய 3 நாடுகளில் வசிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’