வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 ஜூன், 2011

பாக். உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ்

மெரிக்காவில் ஹேட்லி கைது செய்யப்பட்டதன் மூலம் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கும், பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டே ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும், லஷ்கர் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரிடம் பேசிய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விஜய் நம்பியார், உலகளவில் நடைபெறும் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் மையமாக உள்ளது. ஐ.எஸ்.ஐ தலைவர் மற்றும் லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசுவதற்கான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.
வங்கதேசத்தை ஐ.எஸ்.ஐ அமைப்பு குறி‌வைத்துள்ளதாகவும், ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வங்கசேதம் சென்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும், இந்த செயல்களால் இந்தியா கவலையடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆப்கனை சேர்ந்த தலிபான் அமைப்‌பை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அவர்களுடன் போட்டி போடுகின்றனர்.
ஐ.எஸ்.ஐ தலைவர்கள் லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசியதற்கான ஆதாரங்களை அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’