
மேற்படி நபர்களினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் திருமதி எஸ்.விஜயராணி உத்தரவிட்டுள்ளார்.
பல்லேகல என்ற இடத்தைச் சேர்ந்த 41 வயதான ஆனந்த சமரக்கோன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஏ - 9 வீதியில் உமையாள்புரம் என்னுமிடத்தில் அடிகாயங்களுடன் ஞாயிறு காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.மரணத்திற்கான காரணத்தை அறிய சடலம் வைத்திய பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’