வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 ஜூன், 2011

சந்தை வாணிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! நாளாந்த சந்தை வரியும் குறைப்பு - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நடவடிக்கை

கி ளிநொச்சியின் பொதுச்சந்தை தற்காலிகமாக அம்பாள்குளம் பகுதியில் இயங்கி வருகின்றது. இது கிளிநொச்சி நகர்ப்பகுதிக்கு அப்பால் அமைந்துள்ளதனால் நுகர்வோரின் வருகை குறைவாகவுள்ளதாகவும் வருமான விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சந்தை வாணிபர்கள் கவலை தெரிவித்தனர். இதனையடுத்து மேற்படி சந்தை வாணிபர்களுடனான சந்திப்பு ஒன்றை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வாணிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் நன்கு அறிவோம். இதற்கு விரைவான தீர்வினைப் பெற்றுத்தர நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் சந்தைத் தொகுதியை அமைப்பதனூடாகவே அதற்கான நிரந்தர தீர்வினை எட்ட முடியும். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை நாம் மேற்கெண்டுள்ளோம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் இதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். இதற்கமைய அப்பணி விரைவாக ஆரம்பமாகும்.

இதனிடையே வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதாவது உள்ளூர் பேரூந்து சேவைகள் அனைத்தையும் தற்காலிக சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பேரூந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்து சந்தை வியாபாரிகளிடமிருந்து பிரதேச சபையினால் அறவிடப்படும் நாளாந்த வரி 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் சந்தை வளாகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கரைச்சி உதவி அரசாங்க அதிபர் நாகேஸ்வரன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உதயராஜ் பிரதேசசபைச் செயலாளர் தவசோதி கிளிநெச்சி மாவட்ட உதவித் திட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன் இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் சிறீபவன் தனியார் பேரூந்து சேவை பிரதிநிதி சந்தை வாணிபர்களின் பிரதிநிதிகள் வாணிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’