வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 ஜூன், 2011

இலங்கை மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து தான் தொடர்ந்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க கனிஷ்ட இராணுவ அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியமை அவரின் தனிப்பட்ட அப்பிராயம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்கா நிராகரித்திருந்தது.
எனினும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான லெப். கேணல் லோரன்ஸ் ஸ்மித் இம்மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்துகொண்டார். எல்.ரி.ரி.ஈ.யினரின் சரணடைவு தொடர்பான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக அவர் இக்கருத்தரங்கில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா முதலான பல மேற்கு நாடுகள் போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதற்கு முரணான வகையில் லெப். கேணல் லோரன்ஸ் ஸ்மித்தின் கருத்து இருந்தது.
இந்நிலையிலேயே லெப். கேணல் லோரன்ஸ் ஸ்மித் இம்மாநாட்டில் 'ஒரு பார்வையாளராக' கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்த மேற்படி கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தாகும் எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இன்றுவிடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’